காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி…1
நதியை மறந்தோமா…
ஒரு காலத்தில் கோவையின் வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியின் செழுமைக்குக் காரணமாக இருந்தது கௌசிகா நதி. இந்த நதி தற்போது போதிய மழையில்லாமல் நீர்வரத்து இல்லாது புல் புதர்கள் மண்டிக்காடாக வரண்டு காட்சியளிக்கிறது.கௌசிகா நதி இருந்தது என்பது பலருக்குத் தெரியாத ஒன்று. அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் கௌசிகா நதி பற்றிக் கேள்விப்பட்டு அதனைப்பற்றி அறிய வேண்டும் என்ற அவாவில் பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் களம் இறங்கினர். இதற்கு அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் செயலாளரான திரு பிகே செல்வராஜ் அவர்களை அணுகினோம். அவர் முழு ஒத்துழைப்பு தர அவரது வழிகாட்டுதலில் கல்லூரி மாணவர்கள் கௌசிகா நதியின் தடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.
 

இதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் 3 கட்டங்களாக களப்பணிகள் மேற்கொண்டதன் விளைவாக தொல்லியல் ஆதாரங்கள் தல கிடைக்கப்பெற்றன. தரவுகளின் அடிப்படையில் இந்த நதி நாகரீகப் பயன்பாடு பற்றிய உண்மை தகவல்களை முதன்முதலில் வெளி உலகிற்கு கொண்டுவரப்படுகிறது.(தொடரும்)
 
கட்டுரையாளர் :முனைவர் ச.இரவி
raviarchaeologist@gmail.com
இணைப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
கல்வெட்டியல்பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர்.
பூ.சா.கோ கலை மற்றும்அறிவியல் கல்லூரி
உடன்: பூ.சா.கோ கலை மற்றும்அறிவியல் கல்லூரி மாணவர்கள்
உதவி:கௌசிகா நதி செல்வராஜ்