டைம்ஸ் ஆப் இந்தியா விருது ….

மழைக்காடுகள் 85000 ஏக்கர் …

     கோவையில் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களை தேடிப்பிடித்து விருது வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா .மேதகு .ஆளுநர் அவர்கள் “கோவை கெத்து ஹீரோஸ் “என்ற வெவ்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு வழங்கியது .நமக்கு கௌசிகா நதி மீட்பு ,சின்னவேடம்பட்டி ஏரி செயல்கள் ,பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செயல்கள் ,தொடர்ந்து கோவை விவசாயிகளுக்கு 15 வருடங்களாக குரல் கொடுத்தால் ,நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றிய பயணத்துக்கு இந்த விருதை அளித்தனர் .உடன் உயர்திரு .கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ,உயர் திரு .மாநகர கமிஷனர் அவர்கள் கலந்து கொண்டனர்.அங்கேயும் நாம் நீலகிரியில் உள்ள85,000 ஏக்கர்  மழை காடுகள் காப்பாற்றப்படவேண்டிய அவசியத்தை விளக்கி மேதகு கவர்னர் வசம் அளித்துவிட்டு விருது பெற்றோம் .
 
வேர்கள் வெளியே தெரிவதில்லை…
ஏறத்தாழ 20 வருடங்கள் பொதுவாழ்வில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். நிறைய சந்தர்ப்பங்களில் நிறைய பேர் எம்முடன் மிகப்பெரிய செயல்களை முன்னெடுத்து வந்த உள்ளனர். பலர் பல்வேறு செயல்பாடுகளை வெளியே தெரிவிக்க எம்மை அனுமதித்ததில்லை. குறிப்பாக இளைய சமுதாயம் எம்முடன் இருப்பது எமக்கு பலமே. பல்வேறு தரப்பினர், பல்வேறு உதவிகள் செய்து வந்துள்ளனர். கல்வி விஷயங்களில் ஆசிரியர்கள் நல்லதொரு உரிமையுடன் நம்முடன் செயலாற்றி வருகின்றனர். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நமக்கு உறுதுணையாக மிகப் பெரும் பலத்துடன் என்றும் உடன் இருந்துள்ளது பல்வேறு விஷயங்கள் நாம் கையாளப்பட்டு வந்தாலும் கௌசிகா நதி மற்றும் சின்னவேடம்பட்டி ஏ ரி பணிகள் முக்கியமான மைல் கல்கள். அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என்றும் எம்முடன் இனிமையாகவே பயணித்து வந்துள்ளனர். அரசியல் அமைப்பின் தலைவர்கள் பலர் எங்களுக்கு இணக்கமாகவே உடன் வந்துள்ளனர். பல்வேறு விவசாய அமைப்புகள் நமக்கு பல்வேறு வகையில் ஆதரவாக இருந்த உள்ளனர். எமது உறவுகளும், நட்புகளும் என் வாழ்வின் செயல்பாட்டுக்கு வரவேற்பு அளித்து வந்துள்ளனர். ஊடக நண்பர்கள் நமது நல்ல செயல்களுக்கு உறுதுணையாக வந்துள்ளனர். பல்வேறு கலைக்குழுவினர் எனது செயல்பாடுகளுக்கு களமும், தளமும் அமைத்துத் தந்துள்ளனர். வாட்ஸ் அப் மற்றும் முகநூல் நண்பர்கள் தொடர்ந்து நமக்கான ஆதரவை தந்து வருகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல. இந்த விருதை நமக்கு அளித்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கும், எங்களை அடையாளப்படுத்திய நிருபர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், பத்திரிகை அலுவலர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் பல…. எம்மை இயக்கிய எனது மறைந்த அன்பு தாயின் ஆன்மாவிற்கும், எம்மை தாங்கிப் பிடித்து வரும் எனது தந்தை, எனது மனைவி, எனது மகள், எனது மகன் ஆகியோருக்கு நன்றி சொல்வது நன்றாக இருக்காது என்றாலும், இவர்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் என் பணிகள் இவ்வளவு இனிமையாக சென்று இருக்காது. எமது குடும்பத்துக்கு நன்றிகள் பல…