மேதகு ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் ப்ரோஹித் உடனான சந்திப்பு …
நம்பிக்கையான ஒரு நகர்வு …

    நேற்று (14.11.2017 ) மேதகு கவர்னர் ஸ்ரீ பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களை கோவையில் சந்தித்தோம் .சுமார் 87 கோடி அளவில் கௌசிகா நதியின் புணரமைப்பு திட்ட மதிப்பீடு, தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது .இதற்கான நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை .இந்த மதிப்பீட்டில் கௌசிகா நதியின் கரைகளை பலப்படுத்தல் ,துணை ஓடைகளை தூர் வாருதல் ,கழிவுகள் கலக்கும் இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் ,கரையின் வெளிப்புற பகுதிகளில் கழிவு நீரை கொண்டு நமது நாட்டு மரங்களை வளர்த்தல் ,கரையோர விவசாய நிலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உருவாக்குதல் ,கௌசிகா நதி கரையோரம் உள்ள மின் இணைப்பு வழங்க இயலாதவிவசாய விளை நிலங்களுக்கு மானிய விலையில் மின் இணைப்புகள் வழங்கல்,கௌசிகா நதி கரையோர ,விவசாய தொழிலாளர்களுக்கு ஆடு ,மாடு வளர்க்க மானியங்கள் வழங்கல் ,என ஒரு நதிமீட்பு மற்றும் சமூக மேம்பாடு பயனடையும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது .மேற்படி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் நிதி கோரி விண்ணப்பம் அளித்தோம் .மேலும் பவானி நதியையும், நொய்யலையும் இணைக்கும் வாய்ப்புள்ள ஒரு நீர்வழிப்பதை எனவும் எடுத்துரைத்தோம் .
 
கவர்னர் அவர்கள் மிகத்தெளிவாக அனைத்தையும் கேட்டார் .தான் இந்த திட்டத்தை தனிப்பட்ட ரீதியில் அக்கறை எடுத்து மத்திய அரசிடம் சேர்ப்பதாகவும் கூறினார் .தனது உதவியாளரை அழைத்து கௌசிகா நதி திட்டம் பற்றி தனக்கு அப்டேட் செய்யவும் உத்தரவிட்டார் .தான் இது குறித்து மத்திய அமைச்சர் மாண்புமிகு நிதின் கட்காரி வசம் பேசுவதாகவும் குறிப்பிட்டார் .நம்மிடமும் இதுகுறித்து தந்து உதவியாளர் வசம் பாலோ அப் செய்ய சொன்னார் ..நல்லதொரு நம்பிக்கையான சந்திப்பு .இந்த சந்திப்புக்கான விதைகளை ஊன்றி உடன் இருந்த திரு .வெற்றிவேல் ,கிட்டாம்பாளையம் திரு .சத்தியமூர்த்தி திரு .மணிகண்டன் மொழிபெயர்ப்பில் உதவிய சுஜாதா மேடம் ஆகியோருக்கு நன்றிகள் பல ….
 
வீழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும் …ஒரு ரூபாய் போதும்
 மறைந்த  உழவர் பெருந்தகை  திரு .நாராயணசாமி அய்யா ஊரில் சுதந்திரா பள்ளி உள்ளது .இந்த பள்ளியை ஒட்டியும் அய்யாவின் நினைவிடத்தை ஒட்டியும்  கௌசிகா நதி நீர்வழிப்பாதை செல்கிறது .இங்கு கௌசிகா நதியின் பெயர் பலகை இருந்ததால் இந்த பாதியில் 5 கண் பாலம் அமைத்துள்ளனர் . ஆனால் இதே நீர்வழிப்பதையுடன் கூடுதலாக தண்ணீர் வரும் ஆறுவச்செட்டி புதரில் கௌசிகா நதி போர்டு இல்லாததால் நீர் வழி  பாதை குறுகி இரட்டைக்கண் பாலம் அமைத்துள்ளனர் .பாலம் வேலை நடைபெற்றபோது இந்த பெயர் பலகையை அங்கு வேலை செய்த நபர்கள் மொழி தெரியாததால் ஜே .சி .பி மூலம் பெயர்த்தி எடுத்துவிட்டனர் .இங்கு புதிய போர்டு வைக்கவேண்டும் . இதற்காக சுதந்திரா பள்ளியின் ஆசிரியர்கள் வசம் பேசி உள்ளேன் .அங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் போர்டு வைக்க ஒரு ரூபாய்  அல்லது  ஐம்பது பைசா  வாங்கி கௌசிகா நதி போர்டு  வைக்க கேட்டுக்கொண்டேன் .இதன் மூலம் நீர்வழிப்பதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவதுடன் அவர்களுக்கு தாங்கள் கொடுத்த ஒரு ரூபாயின் மூலம் கௌசிகா நதியின் மீது  உரிமை உணர்வும் தோன்றும் . அடுத்த தலைமுறை கௌசிகா நதி   நீர்நிலை காப்பாற்ற பாடுபடும்  .வசூலித்த தொகைக்கு மிகுதியாக கௌசிகா நதி போர்டு வைக்க ஆகும்  செலவை நாமே ஏற்றுக்கொள்வதாக கூறி உள்ளோம் .இதில் ஆசிரிய பெருந்தகைகள் ஆர்வமாக உள்ளனர் .தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று தகவல் அளிப்பதாக கூறினார் .
இதே போலத்தான் கோவில்பாளையம் பகுதியிலும் போர்டுகள் எடுக்கப்பட்டுள்ளது .இங்கே திரு .பழனிசாமி அவர்கள் அதை தேடி பிடித்து  ஒரு சைடு  போர்டை வைத்துள்ளார் .அங்கு பெரிய போர்டு ஆக வைக்க வேண்டும் ..இங்கும் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேண்டுகோள் விடுக்க உள்ளேன் .இரு இடங்களிலும் பெரிய பெயர் பலகையாக கௌசிகா நதி போர்டு வைத்தால் நன்றாக இருக்கும் . கோவில்பாளையம் மற்றும் வையாம்பாளையம் பகுதி மக்களும் ,.நீர்நிலை மேல் அக்கறை உள்ளவர்கள் மாணவர்களுடன் இணைந்து கௌசிகா நதி பெயர் பலகை வைக்க ஏற்பாடு செய்யலாமே …நன்றி ….