அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் நமது  நிகழ்வில் ….உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர் அவர்களுடன்  ஓர் சந்திப்பு ….

அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து நமது கோரிக்கையை தொடர்ந்து விளக்கி வருகிறோம் .பெரும்பாலான அரசியல் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே நமது கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி தங்கள் கட்சியின் முன்னணியினரை சந்திக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் .உயர்திரு,மு .க .ஸ்டலின்,முன்னள் துணை முதல்வர்,தி.மு.கழகம் அவர்களை 08.10.2015அன்று கௌசிகா கரையோரம் அமைந்த மதிப்புக்குரிய திரு. நாராயணசாமி அய்யா நினைவிடத்தில் சந்தித்து நமது மனுவை அளித்தோம் .

கௌசிகா நதி திட்டம் பற்றிய கூர்மையான கேள்விகள் நம்முன் வைக்கப்பட்டது . கௌசிகா நதியை அத்திக்கடவு திட்டத்தில சேர்ப்பது பற்றிய நமது பதில்கள் அவருக்கு நிறைவை தந்தது .

கௌசிகா நதி கரையோர அனைத்து ஊராட்சி ,பேரூராட்சிகள் கௌசிகா நதியை அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்படவேண்டும் என்ற  தீர்மானங்கள் அவரின் கவனத்தை வெகுவாக  ஈர்த்தது.

திரு. மு,க .ஸ்டாலின் முன்னிலையில் திருமதி,சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் தி.மு.கழக தேர்தல் அறிக்கையில் “கௌசிகா நதி “கோரிக்கை வைக்கப்படும் என தீர்மானித்து உள்ளதாக தெரிவித்தார் .


இந்த நிகழ்வுக்கு தன்னார்வத்துடன் ஏற்பாடு செய்த தெற்கு மாநகர் மாவட்ட மகளீர் அணி அமைப்பாளர் திருமதி.மாலதி ,அவர்களுக்கும் ,அனுமதி அளித்த செயலாளர் திரு .நாச்சிமுத்து ஆகியோருக்கு நன்றிகள் .உடன் மேலும் சூலூர் ஒன்றிய கூட்டத்தில் கௌசிகா நதி பற்றிய கோரிக்கையை திரு,மு ,க .ஸ்டாலின் வசம் கொடுக்க சமூக அக்கறையுடன் செயல்பட்ட திரு .எஸ் .எல்.பாலசுப்ரமணியம் ,வாகை திரு.சரவணன் அவர்களுக்கு நன்றிகள் பல.விழா நிகழ்வில் திரு.குமாரசாமி ,எங்களின் செயல் திறம் மிக்க திரு .மகாலிங்கம் .திரு சாமி .சண்முகம் ,திரு வாகை கீதஞ்சலி ஆகியோருடன் வாகை .செல்வராஜ் .அத்திக்கடவு கௌசிகாநதி மேம்பாட்டு சங்கம்

விவசாயிகள் பார்வையில் கௌசிகா நதி …


நதிகளின் நீர் வழிப்பாதைகளை மீட்க விவசாயிகள் சார்பில் கோயம்பத்தூரில் 17.8.2015 அன்று நடைபெற்றது.இதில் முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக கௌசிகா நதி நீர் வழிப்பாதைகளை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ..திரு.பழ நெடுமாறன் அவர்கள் கொங்கு மண்டலம் ,சோழ மண்டலம் ,பல்லவ மண்டல நதிகளையும் மீட்கவேண்டும் என்றார்.திரு.நல்லகண்ணு அவர்கள் வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் போடப்படவேண்டும் என்று மத்திய,மாநில அரசுகளை கேட்டுகொண்டார். ஏ.சி.காமராஜ் அவர்கள் மக்கள் பங்களிப்புடன் திட்டங்கள் நிறைவேற்றலாம் என்றதுடன் நீர்வழிப்பாதை அதன் வழியான போக்குவரத்து குறித்து எடுத்துரைத்தார்.திரு.மருதாச்சல அடிகளார் மக்கள்,விவசயிகள் வேதனைகளை தெளிவுடன் எடுத்துரைத்தார்.

விழா ஏற்பாடுகளை மிக தெளிவாக செய்த எங்களின் இனிய நண்பர் திரு .சு.பழனிச்சாமி , அவர்களுக்கு நன்றிகள் பல..வாழ்த்துக்கள் .

மக்களின் பார்வையில் கௌசிகா நதி …

“கௌசிகா நதி” குறித்த விழிப்புணர்வு அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டு உள்ளது.அத்திப்பாளையம் திரு .துரைசாமி அவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக திசைமாற்றம் குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.திரு.துரைசாமி அய்யா அவர்கள் மிக நீண்ட ,கடுமையான ,தொடர் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் .அவருக்கு எங்கள் நன்றிகள் பல ….