History speaks KOUSIKA RIVER…வரலாறு பேசும் கௌசிகா நதி … கோவை அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் சாலையூர் அருகே கௌசிகா நதியின் வடக்கு கரையில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் மண்ணின் மேற்பரப்பில் ஏராளமான மட்பாண்ட ஓடுகள் காணப்படுகின்றன. கோவையை சேர்ந்த அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கச் செயலாளர் திரு செல்வராஜ் அவர்கள் அப்பகுதியில் காணப்பட்ட [...]
காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி…3(தொடர்ச்சி ) நதியை மறந்தோமா….அருணகிரிநாதர் பாடிய நதி.. முருகன் இருக்கும் தளங்களுக்கு எல்லாம் சென்று பாடியவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர். இவர் எழுதிய நூல் திருப்புகழ். இந்நூலில் குருடிமலை முருகனைப் பற்றி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது. குருடி மலையில் இருக்கும் இறைவனாகிய முருகனை பாடுகிற போது இங்கு மதுரம் எனும் நதி ஓடியதாக இவர் திருப்புகழில் குறிப்பிடுகிறார். இந்த மதுர [...]
காலத்தால் நிச்சயம் அழியாது கௌசிகா நதி …(தொடர்ச்சி 5)கௌசிகா நதிக்கரை நாகரிகம் …சிதைவுற்ற மட்கலங்கள் (Dameged Potteries )…இந்த இடத்தில(கோவில்பாளையம்,சாம்பல் மேடு)மற்றும் (சாலையூர் ,நாரணபுரம் கிராமம் ,அன்னுர் தாலுக்கா )பகுதிகளில் வரலாற்றுக் காலத்துச் சுடுமண் ஓடுகள் ஏராளமாக சேகரிக்கப்பட்டன .தொல்லியலுக்கு அதிகமான உறுதியான ஆதாரங்களை தருவது இச்சுடுமண் கலங்களே .பண்டைய காலமக்கள் பயன்படுத்திய சுடுமண்கலங்கள் சிதைவுகளுக்கு உட்பட்ட நிலையில் அதிக வேலைப்பாடுகளுடன் (designed )கூடியதாக இருப்பதை கண்டறியப்பட்டன . மட்கலங்களில் வேலைப்பாடுகளும் வண்ணப்பூச்சுகளும்(Designed [...]